உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

 ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். உடுமலையில் பிரதான ரோடுகளில் ஒன்றாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கடைகள் அமைந்துள்ளன. இதனால், அங்கு போக்குவரத்து அதிகளவில் காணப்படும். இந்த ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பல முறை நகராட்சிக்கு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, நகராட்சியினரும், போலீசாரும் இணைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை