இட ஒதுக்கீடு அதிகரிக்கணும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில செயலாளர் முகமது ஒலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட தலைவர் நுார்தீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் யாசர் அராபத், துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ், பொருளாளர் சிராஜ்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.தலைமை அறிவித்த முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்ற செயல்திட்டத்தை முறையாக செயல்படுத்துவது, இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.