வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தி. மு. க.அரசுக்கு நிச்சயம் முடிவுகட்டும் இந்த கண்மூடித்தனமான சொத்துவரி, மற்றும் மின்சார கட்டண உயர்வு.
திருப்பூர்; திருப்பூரில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி அதிகம் எனக் கூறி, சொத்து வரி செலுத்த, குடியிருப்பாளர்கள் மறுத்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிக்கேற்ப குறைந்தபட்சம், 80 ஆயிரம் ரூபாய் முதல், 3 லட்சம் ரூபாய் வரை வீடுகளுக்கான பங்களிப்பு தொகையாக, பயனாளிகளிடம் பெறப்பட்டு, வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.திருப்பூர் மாநகராட்சி சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு, ஆண்டுக்கு, 3,000 ரூபாய் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முந்தைய மூன்றாண்டுக்கும் சேர்த்து, சொத்து வரி தொகையை வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், சொத்து வரியை செலுத்தாமல் உள்ளனர்.திருப்பூர் திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராம்குமார் கூறியதாவது:அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீடும், 400 சதுர அடி பரப்பளவு மட்டுமே கொண்டுள்ளன; இதற்கு, ஆண்டுக்கு, 3,000 ரூபாய் சொத்து வரி என்பது மிக அதிகம். வெளியிடங்களில், இதைவிட பெரிய வீடுகளுக்கு கூட, குறைந்தளவு தொகை தான் சொத்து வரியாக வசூலிக்கப்படுகிறது. முந்தைய, 3 ஆண்டுக்கான சொத்து வரியையும் சேர்த்து வழங்க வேண்டும் எனவும், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இது, குடியிருப்புவாசிகளுக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்பதால், சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர். சொத்து வரியை குறைக்க வேண்டும்; அல்லது நிலுவை தொகையில் இருந்து விலக்களித்து, நடப்பாண்டு கணக்கில் வரி வசூலிக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை, தீர்மானமாக நிறைவேற்றி அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக, மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தி. மு. க.அரசுக்கு நிச்சயம் முடிவுகட்டும் இந்த கண்மூடித்தனமான சொத்துவரி, மற்றும் மின்சார கட்டண உயர்வு.