மேலும் செய்திகள்
மாணவர்கள் சந்திப்பு
19-May-2025
திருப்பூர்; பாண்டியன் நகர் அரசு பள்ளியில், 2009ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர் மாநகராட்சி, பாண்டியன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 2009ம் ஆண்டில் பத்தாம் வகுப்பில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றனர்.அவர்கள், தற்போது பல்வேறு பகுதிகளில், தொழில், வேலை, வர்த்தகம் என பல நிலைகளில் உள்ளனர். முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மீண்டும் ஒன்று கூடி, ஒருவரையொருவர் சந்தித்து தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டனர்.அவ்வகையில, 10ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் ஏறத்தாழ நுாறு பேர் நேற்று முன்தினம் பள்ளியில் ஒன்று கூடினர். பலரும் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்ற, படித்த வகுப்பறையில் தங்கள் இடத்தில் சென்று அமர்ந்து தங்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்து மகிழ்ந்தனர். நண்பர்களுடன் பள்ளிக்கால வேடிக்கை, விளையாட்டுகளை ஆர்வத்துடன் அசை போட்டனர்.இந்த சந்திப்பின் நினைவாக, முன்னாள் மாணவர்கள் இணைந்து, பள்ளிக்கு 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்க தேவையான உபகரணங்களை வழங்கினர். சந்திப்பின் முத்தாய்ப்பாக, குரூப் போட்டோ எடுத்து, கற்பித்த ஆசிரியர்களையும் மாணவர்கள் சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.
19-May-2025