மேலும் செய்திகள்
துணை தாசில்தார்கள் இடமாற்றம்
03-Aug-2025
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் அந்தஸ்திலான அலுவலர்கள் திடீரென இடமாறுதல் செய்யப்பட்டனர். திருப்பூர் டி.ஆர்.ஓ.,கார்த்திகேயன் பிறப்பித்த இடமாறுதல் உத்தரவு: மூலனுார் ஆர்.ஐ., கதிரவன், திருப்பூர் கோட்ட கலால் அலுவலகத்துக்கும், அங்கிருந்த பிரவீன் பல்லடம் தாலுகா அலுவலகத்துக்கும், அங்கு பணியாற்றும் ராஜ்குமார், திருப்பூர் கோட்ட கலால் அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டனர். கோட்ட கலால் ஆர்.ஐ., இளையராஜா, ஆதி திராவிடர் நலம் (நிலம் எடுப்பு) ஆர்.ஐ.,யாக நியமிக்கப்பட்டார். அப்பணியிலிருந்த ராமமூர்த்தி, திருப்பூர் பறக்கும் படைக்கும் (சிவில் சப்ளைஸ்), திருப்பூர் வடக்கு தாலுகா ஆர்.ஐ.., ஜெயக்குமார், கலெக்டர் அலுவலகம் 'ஊ' பிரிவுக்கு காலியாக உள்ள பணியிடத்துக்கு மாற்றப்பட்டார். பறக்கும் படை ஆர்.ஐ.,யாக உள்ள பெத்துராஜ், கனிம வளத்துறை தனி ஆர்.ஐ.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியிலிருந்த பாலாஜி, வடக்கு தாலுகா அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
03-Aug-2025