உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில செயற்குழு கூடியது

வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில செயற்குழு கூடியது

அவிநாசி : தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம், அவிநாசியில் நேற்று நடைபெற்றது.மாநில தலைவர் திருமலைவாசன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் அப்துல் மஜீத் வரவேற்றார் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தில் நடைபெற்ற வேலைகள் குறித்து மாநில பொதுச் செயலாளர் ரவி பேசினார்.செயற்குழு கூட்டத்தில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்களான மாவட்ட தலைவர் நடராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாநில பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி