உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காட்டுப்பன்றியால் நெற்பயிர் சேதம்; அதிகாரிகள் குழு ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி

காட்டுப்பன்றியால் நெற்பயிர் சேதம்; அதிகாரிகள் குழு ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி

உடுமலை : கடத்துாரில் காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த நெற் பயிர்களை, வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அமராவதி பழைய ஆயக்கட்டு, மடத்துக்குளம், கடத்துாரில், காட்டுப்பன்றிகள் கூட்டம், நெல் வயல்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் நாசமாவதால், விவசாயிகள் வேதனையடைந்தனர்.காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து, கடத்துார் வி.ஏ.ஓ., தமிழன், அமராவதி வனச்சரகம், கோம்பு கிழக்கு சுற்று வனக்காப்பாளர் நவீன் பிரகாஷ் உள்ளிட்ட வருவாய்த்துறை, வேளாண் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் குழு பயிர் சேதங்களை ஆய்வு செய்தது.அதிகாரிகள் கூறுகையில்,' காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பயிர் சேதம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வனத்துறைக்கு அறிக்கை வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ