உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பராமரிப்பில்லாத கிணற்றால் பாதிப்பு; நோய் பரவும் அபாயம்

 பராமரிப்பில்லாத கிணற்றால் பாதிப்பு; நோய் பரவும் அபாயம்

உடுமலை; உடுமலை கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே கழிவுகள் தேங்கி பாதுகாப்பில்லாத நிலையில் உள்ள கிணற்றை பராமரிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. உடுமலை கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் அருகில் நகராட்சியின் பொதுக்கிணறு ஒன்று உள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவர் கிணற்றின் பாதிவரை மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கிணற்றின் மேல் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் திறந்த நிலையில்தான் உள்ளது. மேலும், பல ஆண்டுகளாக கிணறு பரா மரிப்பில்லாமல் உள்ளது. இதனால் கழிவுகள் தேங்கி மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத் தொல்லையும் அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் சூழலாகவும் மாறுகிறது. மழைக்காலத்தில் கூடுதல் பாதிப்பு உள்ளது. குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழலாக இருப்பதாக பெற்றோரும் அதி ருப்தி தெரிவிக்கின்றனர். கிணற்றை முழுமையாக துாய்மைப்படுத்தி, கம்பி வலை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி