உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் பாய்ந்து ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் அவதி

குடிநீர் பாய்ந்து ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர்; தென்னம்பாளையம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பால் ரோடு பெருமளவு சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் சந்தை வளாகம், உழவர் சந்தை ஆகியவற்றின் வழியாக அமைந்துள்ள மாநகராட்சி ரோட்டில், போக்குவரத்து அதிகம். இந்த ரோடு ஏ.பி.டி., ரோடு வழியாக கருவம்பாளையம், மங்கலம் ரோட்டை இணைக்கும் வகையில் உள்ளது. தினமும் பல்லாயிரம் வாகனங்களும், பொதுமக்களும் பயன்படுத்தும் முக்கிய ரோடாக உள்ளது.இந்த ரோட்டில் அமைந்துள்ள பிரதான குடிநீர் குழாயில், உடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சரி செய்யப்படாமல் இதிலிருந்து குடிநீர் அதிகளவில் வெளியேறி, ரோட்டில் தேங்கி வாகன ஓட்டிகளைப் பாடாய்ப் படுத்துகிறது.இதுதவிர, நாள் கணக்கில் தேங்கிய இந்த தண்ணீர் ரோட்டை அரித்து குழியாக மாற்றி விட்டது. பெரிய அளவிலாக இந்த குழி மாறிய நிலையில், வாகனங்கள் இந்த இடத்தை கடந்து செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. சிறு விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.எனவே, குழாய் உடைப்பு, குடிநீர் வெளியேறுவதை சரி செய்து, குழியை சீரமைத்து வாகனகங்கள் செல்லவும் வசதி ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை