உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குருமலைக்கு ரோடு திட்டம்; திருப்பூர் கலெக்டர் ஆய்வு 

குருமலைக்கு ரோடு திட்டம்; திருப்பூர் கலெக்டர் ஆய்வு 

உடுமலை; குருமலை மலை கிராமத்துக்கு, ரோடு அமைத்தல் உள்ளிட்ட மக்களின் தேவைகள் குறித்து திருப்பூர் கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்துக்குட்பட்டது குருமலை மலைவாழ் கிராமம். இக்கிராமத்தில் இருந்து, சமவெளிக்கு வர ரோடு வசதியில்லை.இதனால், அவசர மருத்துவ தேவைக்கு கூட நோயாளிகளை, தொட்டில் கட்டி துாக்கி வரும் நிலை உள்ளது. கடந்த, 9ம் தேதி அப்பகுதியைச்சேர்ந்த, பழனிசாமி என்பவரை பாம்பு கடித்தது; அவரை, சிகிச்சைக்காக தொட்டில் கட்டி துாக்கி வந்தனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, குருமலையில் இருந்து திருமூர்த்திமலை வரை ரோடு அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து நேற்று திருப்பூர் கலெக்டர் கிருஸ்துராஜ் தலைமையில், வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் குருமலை கிராமத்தில் நேரடி ஆய்வு செய்தனர்.அப்போது, கிராம மக்களிடம், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.பின்னர், குருமலையில் இருந்து பொன்னாலம்மன்சோலை வழியாக, திருமூர்த்திமலை வரை ரோடு அமைக்க திட்டமிடப்பட்ட பாதை வழியாக, கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நடந்து வந்து ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை