உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீப்பந்தம் ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம்; சாலைப்பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

தீப்பந்தம் ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம்; சாலைப்பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

உடுமலை; ''சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சாலைப் பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த மறுக்கும், தமிழக அரசை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தப்படும்,'' என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் தெரிவித்தார்.நெடுஞ்சாலைகளை சீரமைக்கவும், பராமரிப்பு கொள்ளவும் சாலைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்களது கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், உடுமலையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் பங்கேற்ற, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் கூறியதாவது:கடந்த, 2002ல், தமிழக அரசால், சாலைப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், சாலைப்பணியாளர்களை பணிநீக்கம் செய்தது தவறு; 41 மாத பணி நீக்க காலத்தையும் முறைப்படுத்த, கடந்தாண்டு அக்., மாதத்தில் உத்தரவிட்டது.அரசு கடந்த ஐந்து மாத காலமாக உத்தரவை நிறைவேற்றாமல், சாலை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழக முதல்வர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு, தமிழக கவர்னர் அனுமதி வழங்காத போது, உச்சநீதிமன்ற வழக்கு அடிப்படையில், தீர்ப்புகளை அமுல்படுத்தி வருகிறார்.ஆனால், சாலைப்பணியாளர்களுக்கு மட்டும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற அரசு மறுக்கிறது.அரசின் இந்த பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து, அனைத்து கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், சாலை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி மாலை நேர தர்ணா போராட்டமும், அதை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில், மனு வழங்கி தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்படும். இவ்வாறு, தெரிவித்தார். உடன் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் இருந்தார்.இக்கூட்டத்தில், சங்கத்தினர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை