மேலும் செய்திகள்
சாலைப்பணியாளர்கள் மவுன புரட்சி போராட்டம்
14-Oct-2025
திருப்பூர்: கிராமப்புற இளைஞர்களை சாலை பணியாளராக பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூரில், சாலை பணியாளர்கள் நீதி தராசு கையிலேந்தி கும்மியடி முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை ஐகோர்ட் ஆணையின்படி, பணி காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். கிராமப்புற இளைஞர்களை சாலை பணியாளராக பணி நியமனம் செய்ய வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனம் கேட்டு, விண்ணப்பம் செய்து, காத்திருக்கும் சாலை பணியாளர் குடும்பத்துக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர் சங்கம், திருப்பூர் கோட்டம் சார்பில், திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், நுாதனமாக நீதி தராசு கையிலேந்தி கும்மியபடி முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, சாலை பணியாளர்கள் சங்க திருப்பூர் கோட்ட தலைவர் கருப்பன், செயலாளர் ராமன், துணை நிர்வாகி செல்லமுத்து, கருப்பன், அண்ணாதுரை, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டியம்மாள், தமிழ்நாடு சுகாதார பகுதி நேர செவிலியர் சங்க மாநில செயலாளர் அன்னம் சிறப்புரையாற்றினர். கோட்ட பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.
14-Oct-2025