மேலும் செய்திகள்
'போக்சோ'வில் கைது
21-Mar-2025
திருப்பூர்: திருப்பூர் அருகே மூதாட்டியை தாக்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.மங்கலம், சாமளாபுரத்தை சேர்ந்தவர் கோபால்சாமி, 64. இவரது மனைவி பூமணி, 60. நேற்று முன்தினம் கணவர் அந்தியூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்ற நிலையில், பூமணி மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். அன்றிரவு கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்தார். வெளியில் நின்றிருந்த நபர் பணம், நகையை கேட்டு மிரட்டினார்.கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை தாக்கி, பீரோவில் இருந்த, 6 ஆயிரம் ரூபாயை திருடி சென்றார். புகாரின் பேரில் மங்கலம் போலீசார் விசாரித்தனர்.இதுதொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த சையது அலி, 20 என்பவரை கைது செய்தனர்.
21-Mar-2025