உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழிப்பறி வழக்கு: 2 பேர் கைது

வழிப்பறி வழக்கு: 2 பேர் கைது

பல்லடம் - பொள்ளாச்சி ரோடு அனுப்பட்டி அருகே, நெடுஞ்சாலையில் சென்ற லாரியை வழிமறித்த மர்மநபர்கள், டிரைவரை தாக்கி, 1.25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் உத்தரவுப்படி, பல்லடம் டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வந்தது. வழிப்பறியில் தொடர்புடைய சபரீஷ், 25, தனபால், 21 ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீஸ், அவர்களிடம் இருந்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ