உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ. 100 கோடியில் சேவை பணி ரோட்டரி புதிய கவர்னர் திட்டம்

ரூ. 100 கோடியில் சேவை பணி ரோட்டரி புதிய கவர்னர் திட்டம்

திருப்பூர்,; திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய ரோட்டரி மாவட்டம் எண்:3203. இதன் நடப்பாண்டு மாவட்ட கவர்னராக தனசேகர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.முன்னாள் கவர்னர் சுரேஷ்பாபு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ரோட்டரி அறக்கட்டளை அறங்காவலர் பரத் பாண்டியா, முன்னாள் ரோட்டரி கவர்னர் சிவராஜ்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.பதவியேற்பு விழாவில் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி ஏற்றுமதியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், மேயர், எம்.எல்.ஏ.,க்கள், ரோட்டரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.ரோட்டரி கவர்னராக பதவியேற்ற தனசேகர் கூறியதாவது:உலகின் சிறந்த சொல் செயல். சொல்வதைவிட செய்து காட்டுவதே பெருமை. முதன்மை திட்டங்களாக, போதை ஒழிப்பு விழிப்புணர்வு, மலைவாழ் மக்கள் நலம், மகிழ்ச்சியான பள்ளி, மகளிர் பொருளாதார மேம்பாடு, போக்குவரத்து விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை முன்னெடுக் கப்பட்டுள்ளது.நான்கு மாவட்டங்களிலும் 15 கோடி ரூபாய் மதிப்பில் தலா ஒரு முதியோர் இல்லம் அமைக்கப்படும்.ரத்த வங்கிகள், டயாலசிஸ் மையங்கள், குளங்கள்துார் வாருதல், மருத்துவ முகாம்கள், மொபைல் மருத்துவமனைகள், பள்ளிகளில் கழிப்பறைகள், ஸ்மார்ட் ரூம்கள்; எரிவாயு மயானங்கள், மலைவாழ் மக்களுக்கு 100 புதிய வீடுகள், வீடுகள் புனரமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். அவ்வகையில், 100 கோடி ரூபாய் மதிப்பில் 94 திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை