உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமப்புற மதிப்பீடு தயாரிக்கும் பணி

கிராமப்புற மதிப்பீடு தயாரிக்கும் பணி

உடுமலை; உடுமலை செல்லப்பம்பாளையத்தில், வேளாண் கல்லுாரி மாணவர்கள் கிராமப்புற மேம்பாடு திட்ட அறிக்கை தயாரிக்கும் களப்பணியில் ஈடுபட்டனர்.உடுமலை செல்லப்பம்பாளையத்தில், கோவை வேளாண் பல்கலை., வேளாண் கல்லுாரியில், 4ம் ஆண்டு பயிலும் மாணவர்கள், மாணவ - ஊரக தொழில் முனைவோர் விழிப்புணர்வு மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப்புற மதிப்பீடு தயாரிக்கவுள்ளனர்.கிராம மக்களின் வேளாண் அனுபவம் மற்றும் கருத்துக்களை பயன்படுத்தி, வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கவும், செயல்படுத்தும் வகையில் அறிக்கை தயாரிக்க முகாமிட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ், கிராமத்தின் சமூக வரைபடம், கிராமத்தின் நகர்வு வரைபடம், பருவகால நாட்காட்டி, செல்வம், வருவாய் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து, கிராமப்புற மக்களின் தேவைக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்துதல், சமூக நல்வாழ்வை மேம்படுத்துதல், உள்ளூர் மக்களின் ஈடுபாட்டுடன் செயல்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ள முடியும் என, வேளாண் துறையினர், மாணவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ