உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சொன்னது 2 ஆண்டு; ஆனது 4 ஆண்டு

சொன்னது 2 ஆண்டு; ஆனது 4 ஆண்டு

திருப்பூர்; மாநகராட்சி மார்க்கெட் வளாகம் திறப்பு குறித்து சங்க நிர்வாகிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான மார்க்கெட் வளாகம், பல்லடம் ரோட்டில் உள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த வளாகம் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ளது. வளாகம் கட்டும் பணிக்காக இங்கு பல ஆண்டுகளாகச் செயல்பட்ட கடைகள், தற்காலிகமாக, காட்டன் மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.இரண்டாண்டு காலத்துக்குள் கட்டி முடித்து வளாகம் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணி நீண்ட தாமதானது. ஏறத்தாழ நான்காண்டு காலமாகி தற்போது தான் பெருமளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் தங்கமுத்து தலைமையில் சங்க நிர்வாகிகள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் மற்றும் கமிஷனர் ஆகியோரைச் சந்தித்து பேசினர். தற்காலிக மார்க்கெட் வளாகத்தில் தற்போது வர்த்தகம் குறைந்து வருகிறது. விரைந்து புதிய மார்க்கெட் வளாகம் திறக்க வேண்டும்.கடைகள் ஒதுக்கீடு செய்து வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களிடம் பேசிய மேயர் மற்றும் கமிஷனர் ஆகியோர், ஒரு வாரத்துக்குள் இது குறித்து ஆலோசனை நடத்தி பணிகள் நிலவரம் குறித்து ஆய்வு செய்து, முடிவு அறிவிப்பதாகத் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை