மேலும் செய்திகள்
சபரிமலை மேல்சாந்தியாக திருச்சூர் பிரசாத் தேர்வு
19-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிந்தது. ஐப்பசி மாத திருமணங்கள் முடிந்த நிலையில், பவுர்ணமிக்கு பின் விசேஷ தினங்கள் இல்லாததால், பூ விற்பனை மந்தமாகியுள்ளது. மழை குறைந்துள்ள நிலையில், திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு பூ வரத்தும் அதிகமாகவே உள்ளது. வரத்து உயர்ந்துள்ள நிலையில், விற்பனை சரிந்துள்ளதால், நேற்று மல்லிகை பூ கிலோ, 350, முல்லை கிலோ, 300, செவ்வந்தி, 200, அரளி, 150 ரூபாய், ரோஜா இரண்டு பூ, 15 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 'வரத்து இயல்பாக உள்ளது; அதற்கேற்ற விற்பனை இல்லை. கார்த்திகை மாத பிறப்பு, அய்யப்ப சுவாமி, சபரிமலை சீசன் துவக்கம் வரை விலை குறைவாகத்தான் இருக்கும்,' என, பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
19-Oct-2025