உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சங்கிலிப்பள்ளம் ஓடை துார்வாரும் பணி ‘ஜரூர்’

சங்கிலிப்பள்ளம் ஓடை துார்வாரும் பணி ‘ஜரூர்’

திருப்பூர்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சங்கிலிப்பள்ளம் ஓடை துார்வாரும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நீர்நிலைகளை துார்வாரி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பூரில் உள்ள சங்கிலிப்பள்ளம் ஓடை, ஜம்மனை ஓடைகளை துார்வார மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில், பொக்லைன் வாகனத்தை கொண்டு, சங்கிலிப்பள்ளம் ஓடை முழுவதும் துார்வாரும் பணி நடந்து வருகிறது. தென்னம்பாளையம் முதல், நொய்யல் ஆறு வரை, ஓடையை துார்வாரும் பணி நடந்து வருகிறது. இதேபோல், சபரி ஓடை, ஜம்மனை ஓடை துார்வாரும் பணிகளும் நடந்து வருகிறது. கடந்த, 2011ம் ஆண்டு ஓடை துார்வாராமல் இருந்த போது, கனமழை பெய்து, வீடுகளுக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. அந்நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஓடைகள் துார்வாரி சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஒருவாரத்துக்குள், அனைத்து ஓடைகளும் துார்வாரி முடிக்கப்படும் என, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !