சந்தன மரம்வெட்டி கடத்தல்
அவிநாசி: அவிநாசி, சேவூர் ரோட்டில் நாயக்கன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது வீட்டு தோட்டத்தில், சந்தன மரம் ஒன்று வளர்ந்திருந்தது.நேற்று முன்தினம் இரவோடு இரவாக சந்தன மரத்தை அடியோடு மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர்.அவிநாசி போலீசாரிடம் தியாகராஜன் புகார்அளித்தார். வெட்டப்பட்ட சந்தன மரம் 27 ஆண்டு கால மரமாகும்.