மேலும் செய்திகள்
பயன்பாடற்ற பல்நோக்கு மையம் பாழடையும் அவலம்
08-Jan-2025
பல்லடம்; பல்லடம் அடுத்த கரைப்புதுார் ஊராட்சிக்குட்பட்ட காளிநாதம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி, கடந்த, 2017ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.அருகில் உள்ள பொன் நகர் கிராமத்தில், இடம் தேர்வு செய்யப்பட்டு, 85 லட்சம் ரூபாய் மதிப்பில், 4 வகுப்பறைகளுடன் புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. ஆய்வகம், கணினி அறை, ஆசிரியர்கள் அறை, நுாலகம், உடற்கல்வி அறை, கழிப்பிடம் என எந்த கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவில்லை.மாணவ, மாணவியருக்கே இங்கு போதிய இடம் இல்லாததால் திறப்பு விழா நடந்தும், ஆறு மாதமாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பள்ளி கட்டடம் அருகிலேயே கழிப்பிடம், பி.ஏ.பி., வாய்க்காலை ஒட்டி கட்டப்பட்டு வருகிறது. கழிப்பிடம் விதிமுறை மீறி கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கான வழித்தடமும் பள்ளியில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால்தான் இங்கு பள்ளியைச் செயல்படுத்த முடியும்.
08-Jan-2025