உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று பள்ளி செயல்படும்

இன்று பள்ளி செயல்படும்

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும், இன்று செயல்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.இன்று (9ம் தேதி) சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சி பள்ளிகள் முழு நேரம் செயல்படுமென மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தீபாவளிக்கு மறுநாள் நவ., 1ம் தேதி (வெள்ளி) பண்டிகைக்கு அடுத்த நாள் பொது விடுமுறையாக அரசு அறிவித்தது. அந்த விடுமுறைக்கு ஈடு செய்யும் வகையில், 9ம் தேதி பள்ளிகள் இயங்க வேண்டும் என இயக்குனரகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, இன்று (9ம் தேதி) பள்ளிகள் செயல்படுமென, அறிவிக்கப்பட்டுள்ளது' என்றனர். --- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ