உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்வு மையத்தில் மாணவியரிடம் அத்துமீறிய பள்ளி ஆசிரியர் கைது

தேர்வு மையத்தில் மாணவியரிடம் அத்துமீறிய பள்ளி ஆசிரியர் கைது

திருப்பூர் : திருப்பூரில் அரசு பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 2 மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தனியார் பள்ளி ஆசிரியரை 'போக்சோ' வில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.ஊட்டியை சேர்ந்தவர் சம்பத்குமார், 34. இவர் திருப்பூரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பொதுதேர்வு நடந்து வருவதால், அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 'சூப்பர்வைசிங்' பணி இவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று காலை அப்பள்ளியில் நடந்த தேர்வை அரசு, தனியார் பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் எழுதினர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் சம்பத்குமார், தேர்வு எழுதி கொண்டிருந்த தனியார் பள்ளியை சேர்ந்த, ஆறு மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இதுதொடர்பாக மாணவியர், இது குறித்து, பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். அதன் முடிவில், ஆசிரியர் சம்பத்குமாரை 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ