உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை பள்ளிகள் திறப்பு புத்தகங்களும் வினியோகம்

நாளை பள்ளிகள் திறப்பு புத்தகங்களும் வினியோகம்

திருப்பூர், : கோடை விடுமுறைக்கு பின் நாளை (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி திறப்பை ஒட்டி நான்கு நாட்களாக வளாகம், வகுப்பறை, மைதானம், குடிநீர்தொட்டி, சமையல்கூடம், கழிப்பிடம் உள்ளிட்டவை துாய்மைப்படுத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி திறக்கும் நாளில் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வர வேண்டும். காலை வணக்கக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வகுப்பாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஒரு பள்ளியை விட்டு மற்றொரு பள்ளியில் இணைந்தவர்கள், துவக்கப்பள்ளி முடிந்து நடுநிலைப்பள்ளிக்கு வந்தவர்கள், பத்தாம் வகுப்பு முடிந்து பிளஸ் 1 வில் இணைந்தவர் புதிய பள்ளிக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.

புத்தகம் வினியோகம்

பள்ளி திறக்கும் நாளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவ, மாணவியருக்கும் புத்தகம் வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. எனவே, நாளை முதல் பாடவேளையில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டு விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை