உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரதான ரோட்டில் பாதுகாப்பு தேவை

பிரதான ரோட்டில் பாதுகாப்பு தேவை

உடுமலை: உடுமலை அருகே, ராமகுளம் பகுதியில், ரோட்டோரத்தில் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். உடுமலை அருகேயுள்ள கல்லாபுரத்திலிருந்து, ருத்திராபாளையம் வரை அமைந்துள்ள ரோட்டில், ரோட்டோரத்தில் ராமகுளம் அமைந்துள்ளது. தினமும், ஏராளமான வாகனங்கள் இந்த ரோட்டை பயன்படுத்தி வரும் நிலையில், குளத்தின் நீர் தேங்கும் பகுதி ரோடு வரை அமைந்துள்ளது. இந்த ரோட்டில் வரும் வாகனங்கள், நிலைதடுமாறி குளத்திற்குள் விழும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஒரு பகுதியில் பக்கவாட்டில், கனரக இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. சிறிது துாரம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையாக அமைக்காததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ராமகுளம் பகுதியில் ரோட்டோரத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை