மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
26-Jun-2025
உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், மாணவர் பேரவைத் தேர்தல் இணையவழியில் நடந்தது. பேரவை பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இளங்கலை இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் முதுகலை இரண்டாமாண்டு மாணவியர் இந்த தேர்தலில் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி, கல்லுாரி பேரவை ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சல் ஜாய் முன்னிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.கல்லுாரி மாணவர் பேரவை தலைவியாக தர்ஷினி, செயலாளராக பிரணவஸ்ரீ, மாணவ துணை செயலாளராக சங்கமித்ரா தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற மாணவியருக்கு செயலாளர் சுமதி, ஆலோசகர் மஞ்சுளா, கல்லுாரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் மாணவியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
26-Jun-2025