உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அகமதிப்பீடு மதிப்பெண் வழிகாட்டுதல்

அகமதிப்பீடு மதிப்பெண் வழிகாட்டுதல்

திருப்பூர்; வரும், 2025 மார்ச், 3 முதல், 27ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கவுள்ளது. அதனை தொடர்ந்து பிளஸ் 1 தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. செய்முறைத் தேர்வுகள் பிப்., இரண்டாவது வாரம் துவங்க உள்ளது. இதற்காக தேர்வெழுதவுள்ள மாணவ, மாணவியர் பட்டியல் விபரம் தயாரிப்பு, தேர்வு மையம் தெரிவு செய்தல் உள்ளிட்ட தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணி நடந்து வருகிறது.பொதுத்தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவருக்கு அகமதிப்பீடு மதிப்பெண் வழங்க வேண்டுமென தேர்வுத்துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களின், 81 - 100 சதவீத வருகைப்பதிவுக்கு இரண்டு மதிப்பெண்ணும், 75 - 80 சதவீத வருகைப்பதிவுக்கு, ஒரு மதிப்பெண்ணும் தர வேண்டும். மாணவ, மாணவியரின் வருகைப்பதிவு மட்டுமின்றி, அவர்களின் பள்ளித்தேர்வுகள், செயல்திட்டங்கள்மற்றும் கல்வி இணை செயல்பாடுகளும் அகமதிப்பீடு மதிப்பெண்களுக்கு கருத்தில் கொள்ள வேண்டும்.பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள் வழிகாட்டுதல்களை விரிவாக அறிந்து, அதற்கேற்ப மதிப்பெண் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு இதற்கான முன்னேற்பாட்டு பணி மட்டும் நடந்து வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி