மேலும் செய்திகள்
பாலின சமத்துவ கருத்தரங்கம்
02-Aug-2025
திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில், 'இளம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், தலைமை வகித்தார். கருத்தரங்கு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாலாமணி வரவேற்றார். பேராசிரியை அமிதர்வாணி, முன்னிலை வகித்தார். நீரிழிவு நோய் நிபுணர் சத்யகலா, குமரன் கல்லுாரி உளவியல் பேராசிரியை சிவப்பிரியா, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி பேராசிரியை சுகந்தி, மகப்பேறு மருத்துவர் பிரேமலதா ஆகியோர் பேசினர்.கருத்தரங்கு குழு உறுப்பினர்கள் பேராசிரியைகள் சுமதி, சுதா, செல்வதரங்கிணி ஆகியோர் பேசினர். பேராசிரியை மீனாட்சி நன்றி கூறினார். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவியர், தங்கள் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொண்டனர்.
02-Aug-2025