உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கருத்தரங்கம் விவசாயிகளுக்கு அழைப்பு

கருத்தரங்கம் விவசாயிகளுக்கு அழைப்பு

பல்லடம்: 'மண் பயனுற வேண்டும்' எனும் கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெற, தொழில் துறையினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பல்லடம் வனம் அமைப்பின் வனாலயம் அடிகளார் அரங்கில், 'மண் பயனுற வேண்டும்' எனும் தலைப்பிலான சிறப்பு கருத்தரங்கம், மற்றும் பழனி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்று இருக்கும் சுப்பிரமணியத்துக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி என, இருபெரும் விழா இன்று மாலை, 4:00 மணிக்கு நடைபெற உள்ளது.இதில், ஹார்ட்புல்னஸ் அமைப்பின் தலைவர் ஸ்ரீராம் ராகவேந்திரன், வேளாண் பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். இதில், பங்கேற்க விவசாயிகள் மற்றும் பசுமை ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ