மேலும் செய்திகள்
மாவட்ட தடகள போட்டியில் 'போட்டோ பினிஷ்' முறை
18-Oct-2025
திருப்பூர்: ஆசிய மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி பெற்று, தங்கம் வென்ற மூத்த வீராங்கனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்திய தடகளக் கூட்டமைப்பு சார்பில், 23வது ஆசிய மூத்தோர் தடகளப்போட்டி, நவ. 5ம் தேதி சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் துவங்கியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த, 5,000த்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தடகள போட்டி களில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஆறு ஆண்கள், ஆறு பெண்கள் என, 12 பேர் பங்கேற்றனர். திருப்பூர், -சின்னச்சாமியம்மாள் மாநகராட்சிப் பள்ளி ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் கண்ணம்மாள் வீராங்கனையர், 75 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவு, வட்டு எறிதலில் பங்கேற்று, இரண்டாமிடம் பெற்று வெள்ளி வென்றார். ஈட்டி எறிதலில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார். ஆசிய மூத்தோர் தடகள போட்டியில் முதலிடம் பெற்று, தங்கம் கைப்பற்றிய கண்ணம்மாளுக்கு விளையாட்டுத்துறையினர்பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
18-Oct-2025