உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடர் திருட்டு சம்பவங்கள்; அச்சத்தில் பொதுமக்கள்

தொடர் திருட்டு சம்பவங்கள்; அச்சத்தில் பொதுமக்கள்

உடுமலை; உடுமலையில், அடுத்தடுத்து வீடுகளுக்குள் புகுந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை பகுதிகளில், கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து, திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம், மின் நகர் பகுதியில் இரு வீடுகளின் கதவுகளை உடைத்து, நகை, பணம் திருடப்பட்டது.அதே போல், கடந்த, 22ம் தேதி, சின்னவீரம்பட்டி இந்திராநகர் நாகராஜன், 25, வீட்டில், யாரும் இல்லாத நேரத்தில், வீட்டுக்கதவை உடைத்து, 15 சவரன் நகை திருடப்பட்டது. வெற்றி அவன்யூ விக்ரம், 30, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு, ஒரு பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் பணம் திருடப்பட்டது. அதே போல், பிரபு நகர் சீனிவாச பிரபு, 40, வீட்டில், 35 ஆயிரம் மதிப்புள்ள, வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூபாய் 5ஆயிரம் திருடப்பட்டது.உடுமலை தாராபுரம் ரோட்டிலுள்ள, குடியிருப்பு பகுதிகளில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை