மேலும் செய்திகள்
பீட்ரூட் சாகுபடியில் மீண்டும் விவசாயிகள் ஆர்வம்
09-Aug-2025
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதிகளில், விவசாய நிலங்களிலிருந்து மின் கேபிள், மோட்டார்கள் தொடர்ந்து திருடப்படுவது குறித்து, டி.எஸ்.பி.,யிடம் விவசாயிகள் புகார் அளித்தனர். உடுமலை அருகேயுள்ள, முக்கோணம், பூலாகிணர், அந்தியூர், சடையபாளையம், வெனசுபட்டி, தளி, எரிசனம்பட்டி, தேவனுார்புதுார், பொன்னாலம்மன்சோலை உள்ளிட்ட பகுதிகளில், நுாற்றுக்கணக்கான விவசாய கிணறுகள், போர்வெல்களிலிருந்து மின் மோட்டார்கள், மின் கேபிள்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. இது குறித்து, போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை, என தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில், டி.எஸ்.பி., நமச்சிவாயம், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மின் கேபிள்கள் திருடப்பட்ட, 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி., உறுதியளித்துள்ளார்.
09-Aug-2025