உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது; 10 சவரன் நகை; ரூ. 2 லட்சம் மீட்பு

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது; 10 சவரன் நகை; ரூ. 2 லட்சம் மீட்பு

உடுமலை; உடுமலை பகுதியில், பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டவரை, போலீசார் கைது செய்து, நகை, பணத்தை மீட்டனர்.உடுமலை உட்கோட்ட பகுதிகளில், பூட்டியுள்ள வீடுகள் மற்றும் கடைகளை நோட்டமிட்டு, திருட்டு சம்பவங்கள் அதிகரித்த நிலையில், குற்றவாளிகளை பிடிக்க, டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையில், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், எஸ்.ஐ.,கள் கிருஷ்ணகுமார், பஞ்சலிங்கம் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.இக்குழுவினர் சம்பவ இடங்களில் ஆய்வு செய்து, குற்ற வகை மற்றும் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு, குற்றவாளிகள் தேடி வந்தனர்.இந்நிலையில், தாராபுரம் ரோடு சித்தக்கோட்டை பகுதியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட திருச்சி, துவாக்குடிமலையைச்சேர்ந்த சிங்கார வேலன், 36, கைது செய்யப்பட்டார்.அவர், கரூர், தங்க நகர், மாரிமுத்து விஜய் உடன் சேர்ந்து, தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். சிங்கார வேலனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 10 சவரன் தங்க நகை, 2 லட்சம் ரூபாய் மற்றும் திருட்டு வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்புடைய குற்றவாளியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ