சாக்கடை கால்வாய் பணிகள் மந்தம்
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 24வது வார்டு பா.ஜ சார்பில், மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு:திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலத்திற்குட்பட்ட 24வது வார்டு சாமுண்டிபுரம் இரண்டாவது வீதியில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்டுவதற்காக சுமார் 20 நாட்களுக்கு முன் குழி தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட மண் இதுவரை அப்புறப்படுத்தப்படவில்லை. பைக் கூட செல்ல முடியாத நிலையில் ரோடு உள்ளது.தோண்டப்பட்ட சாக்கடையின் நடுவில் கம்பம் உள்ளது. மாநகராட்சி மண்டல நிர்வாகத்திடம் பல முறை மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. சாக்கடை பணியை விரைந்து முடித்து தர வேண்டும்.