மேலும் செய்திகள்
சுரங்கப்பாலத்தில் கழிவுநீர் தேக்கம்
02-Oct-2024
உடுமலை : உடுமலை, ராமசாமி நகர், பழனியாண்டவர் நகர் உள்ளிட்ட தெற்கு பகுதி குடியிருப்புகளுக்கு செல்ல பிரதான வழித்தடமாக, பெரியார் நகர் ரயில்வே சுரங்க பாலம் உள்ளது.திட்ட வடிவமைப்பு குளறுபடி காரணமாக, இந்த பாலத்தில் ஆண்டு முழுவதும் சாக்கடை கழிவு நீர் தேங்கி வருவதோடு, மழை காலத்தில் பாலம் வெள்ள நீரில் மூழ்கி வருகிறது.இதனால், இப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி மாணவர்கள் பல கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.எனவே, ரயில்வே சுரங்கப்பாலத்தில் கழிவு நீர் சேகரிப்பு கிணறு, நீர் வெளியேற்றும் மோட்டார் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.நகராட்சி சார்பில், இதற்கான பணிகள் நடந்தும், ரயில்வே மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், தொடர்ந்து பல அடி உயரத்திற்கு கழிவு நீர் தேங்கி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
02-Oct-2024