உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையில் சாக்கடை மக்களுக்கு சங்கடம்

சாலையில் சாக்கடை மக்களுக்கு சங்கடம்

திருப்பூர்:திருப்பூர், பெருமாநல்லுார் ரோடு, கணக்கம்பாளையம் பிரிவு பகுதியில் ரோட்டில் தேங்கும் சாக்கடை நீரால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். திருப்பூர், பி.என்.ரோடு, கணக்கம்பாளையம் பிரிவு, பொங்குபாளையம் ரோடு, சிட்கோ கேட் எதிரில் உள்ள வளைவில் ரோட்டில் சாக்கடை நீர் வழிந்து ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டால் அவதிப்படுகின்றனர். இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:ஒரு மாதத்துக்கு முன் இது போல், சாக்கடை கழிவுநீர் தேங்கி இருந்தது. புகாரின் பேரில், சீரமைக்கப்பட்டது. ஆனால், அதில் அமைக்கப்பட்ட குழாய்கள், தகுந்த அளவு இல்லாமல் சிறிய அளவாகவும் இருக்கின்றன. அதனால், மீண்டும் கழிவுநீர் தேங்குவதால், துர்நாற்றம் வீசி மிகவும் சிரமப்படுகிறோம். தேங்கியிருக்கும் சாக்கடை கழிவுநீரால் இப்பகுதியை கடக்க சிரமமாகவும், அருவெறுப்பாகவும் உள்ளது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ