உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆசிரியர் - வகுப்பறை பற்றாக்குறை; அரசு பள்ளி மாணவர்கள் அவதி

ஆசிரியர் - வகுப்பறை பற்றாக்குறை; அரசு பள்ளி மாணவர்கள் அவதி

பெருமாநல்லூர்; திருப்பூர் ஒன்றியம், கணக்கம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.ஆறு முதல் 9ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் நான்கு பிரிவுகள் செயல்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும், 70 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப போதிய வகுப்பறை இல்லை. ஒரே வகுப்பறையில் அதிக மாணவர்கள் நெருக்கடியில் அமர்ந்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மாணவர்கள் எண்ணிக்கேற்ப போதிய ஆசிரியர்களும் இல்லை. இதனால் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில், 10 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. மாணவர்கள் சைக்கிள் நிறுத்த இடமில்லாததால், பள்ளியின் முன் ரோட்டின் ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சைக்கிளை நிறுத்தி உள்ளனர்.பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகிகள் கூறியதாவது:கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளது. நீட் தேர்விலும் மாணவர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும். ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். மாணவர்களின் சைக்கிளை நிறுத்தவும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை