உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காதல் ஆசை காட்டி ரூ.26 லட்சம் லவட்டல்

காதல் ஆசை காட்டி ரூ.26 லட்சம் லவட்டல்

திருப்பூர்: தங்க சுரங்கத்தில் முதலீட்டுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி, 26.5 லட்சம் ரூபாயைகைவரிசை காட்டிய மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர் மங்கலம் ரோடு, 40 வயது மதிக்க நபருக்கு கடந்த டிச., மாதம் மும்பையை சேர்ந்த லிதியா என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகமானார். அந்த பெண் வணிகம் தொடர்பாக பேசினார்.பின், வாட்ஸ்-அப் மூலமாக பேசிய போது, அந்த பெண் தனது காதலை வெளிப்படுத்தி, திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். தங்க சுரங்கம் மற்றும் வர்த்தகத்தில் குறைந்த முதலீடு மூலம், தான் அதிகப்படியான பணத்தை சம்பாதித்து வருவதாகவும், முதலீடு செய்ய தெரிவித்தார்.அப்பெண் கூறியதை நம்பிய அவர் கொடுத்த லிங்க்குக்குள் சென்று வர்த்தக கணக்கை தொடங்கினர். பல்வேறு பரிவர்த்தனை மூலம், 26.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.பணத்தை திரும்ப பெற நினைத்து எடுக்க முயன்ற போது, சில காரணங்களை கூறி, கூடுதல் பணம் கட்ட கூறினர். பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை