உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சித்தா சிறப்பு; நாடிச் செல்லும் மக்கள்

சித்தா சிறப்பு; நாடிச் செல்லும் மக்கள்

கொரோனா பரவலின்போது, சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகள் மீது, மக்களின் ஆர்வம் அதிகரித்தது. அரசு சித்தா மருத்துவமனைகளை நோக்கி, மக்கள் படையெடுக்கத் துவங்கினர். கொரோனா முடிவுக்கு வந்த பிறகும், இது தொடர்கிறது.திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, மாவட்ட சித்தா பிரிவு மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு ஓமியோபதி மருத்துவமனையும் உள்ளது.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு இவ்வளாகத்தில் செயல்பட்ட போது கூட்டம் அதிகமாக இருந்தது. தற்போது, நாள் ஒன்றுக்கு, நுாறு பேர் வரை ஆலோசனை பெற வருகின்றனர். தினமும் காலை, 8:00 முதல் 12:00 மணி வரையும், மாலை 3:00 முதல் மாலை 5:00 மணி வரையும் சித்தா புறநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது.

நில வேம்பு கஷாயம்

திருப்பூர் சித்தா பிரிவு, உதவி மருத்துவ அலுவலர், யாகசுந்தரம் கூறியதாவது: கொரோனாவுக்கு பின் சித்தா மருத்துவத்தை பலர் நாடி வருவது தொடர்கிறது. தற்போதும் காய்ச்சல், சளி, இருமல் என்றால் எதிர்ப்பு சக்திக்கு பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கஷாயம் குடித்து வருகின்றனர்.மாவட்ட சித்தா மருத்துவப்பிரிவில், காலை 10:00 முதல், 11:00 மணி வரை நிலவேம்பு கஷாயம் இலவசமாக வழங்கப்படுகிறது.நாள் ஒன்றுக்கு, 90 முதல், 120 பேர் புறநோயாளிகள் பிரிவுக்கு டாக்டரை சந்திக்க வருகின்றனர். உள்நோயாளிகளாக, 30 பேர் தங்கி சிகிச்சை பெற வசதி உள்ளது; தற்போது, ஐந்து பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நோயாளிகள் ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்க, ஆறு டாக்டர், உதவியாளர் கொண்ட குழு உள்ளது. பார்வை நேரம் தவிர, பிற நேரங்களிலும் ஒரிருவர் பணி மற்றும் கண்காணிப்பில் உள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகமாக தொற்றா நோய்கள், ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் தோல் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டு பாதிப்புகளால் ஏற்படும் கழுத்து வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, தோள் வலி இவற்றுக்கு பலர் சித்தா பிரிவு டாக்டர்களை தேடுகின்றனர். இயன்ற வரை சிறப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது.புற சிகிச்சை முறைகளான வர்மம், நசியம், தொக்கணம், சுட்டிகை, யோகாசன பயிற்சிகளும் நோய்களுக்கு தகுந்தவாறு வழங்கப்படுகிறது.தற்போது அதிகரித்து வரும் குழந்தை பேறின்மைக்கு ஆண் - பெண் இருபாலருக்கும் ஆலோசனை மற்றும் சிகிச்சை தினசரி வழங்கப்படுகிறது.இவ்வாறு, டாக்டர் யாகசுந்தரம் தெரிவித்தார்.திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, மாவட்ட சித்தா பிரிவு மருத்துவமனையில், புற சிகிச்சை முறைகளான வர்மம், நசியம், தொக்கணம், சுட்டிகை, யோகாசன பயிற்சிகளும் நோய்களுக்கு தகுந்தவாறு வழங்கப்படுகிறது. தற்போது அதிகரித்து வரும் குழந்தை பேறின்மைக்கு ஆண் - பெண் இருபாலருக்கும் ஆலோசனை மற்றும் சிகிச்சை தினசரி வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை