உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பட்டு விவசாயிகள் விழா இன்று நடக்கிறது

பட்டு விவசாயிகள் விழா இன்று நடக்கிறது

உடுமலை : உடுமலை அருகேயுள்ள பூளவாடியில், பட்டு விவசாயிகள் விழா மற்றும் கருத்தரங்கம் இன்று நடக்கிறது.சேலம், மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், தமிழக பட்டு வளர்ச்சித்துறை சார்பில், இன்று காலை, 10:00 மணிக்கு, உடுமலை அருகேயுள்ள பூளவாடி, கல்பனா கலையரகத்தில், பட்டு விவசாயிகள் விழா மற்றும் கருத்துப்பட்டறை நடக்கிறது. பெங்களூரு மத்திய பட்டு வாரிய இயக்குனர் மந்திரமூர்த்தி, மைசூரு மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் காந்திதாஸ், தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறை செயலர் அமுதவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இதில், சமூக பொருளாதார மேன்மைக்காக நிலையான வெண்பட்டு உற்பத்தி, மல்பெரி சாகுபடியில் சொட்டு நீர் உரப்பாசனம், மல்பெரியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கமும், விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல், கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ