அன்னதான கூட வளாகத்தில் பிடிப்பட்ட சாரைப்பாம்பு
அவிநாசி; திருமுருகன்பூண்டியில், பிரசித்தி பெற்ற திருமுருகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், செயல் அலுவலர் அலுவலகம் அருகே அன்னதான கூட வளாகம் உள்ளது.இதில் நேற்று அருகில் இருந்த புதரில் இருந்து 7 அடி நீள சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதனைப் பார்த்த ஊழியர்கள் கத்திக்கூச்சலிட்டு வெளியில் ஓடினர்.அதன்பின், பாம்பு பிடிக்கும் நபர் வரவழைக்கப்பட்டு அரை மணி நேர போராட்டத்துக்கு பாம்பு பிடிக்கப்பட்டு, அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. இதையடுத்து, கோவில் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.