உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாற்றுத்திறனாளிக்கான சமூக தரவு தளம்

 மாற்றுத்திறனாளிக்கான சமூக தரவு தளம்

திருப்பூர்: கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை: தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நலத்திட்டங்கள் அனைத்தும், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று சேரும் வகையில், உலக வங்கி நிதியுதவியுடன் 'தமிழ்நாடு உரிமைகள் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தின் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முன்களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று இக்கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் குறித்த முழுமையான விவரங்களைச் சேகரிப்பதே இதன் நோக்கம். இதற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்களின் வழியே முன்களப்பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்கணக்கெடுப்பு பணி கடந்த மாதம், 18ம் தேதி தொடங்கி, தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பிற்கு, தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி, பணி சிறப்பாக நடைபெற உதவ வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !