சாப்ட்பால் டென்னிஸ் போட்டி; தி ஏர்னெஸ்ட் அகாடமி வெற்றி
திருப்பூர்; தேசிய அளவிலான 'சாப்ட்பால் டென்னிஸ்' போட்டியில், தி ஏர்னெஸ்ட் அகாடமி பள்ளி அபார வெற்றி பெற்றது. தேசிய அளவிலான சாப்ட்பால் டென்னிஸ்' போட்டி நடந்தது. தமிழகம் உட்பட, 24 மாநிலங்கள் பங்கேற்றது. தமிழகம் சார்பில், திருப்பூரை சேர்ந்த ஹேமவர்சினி பங்கேற்று தங்கம் வென்றார். பதக்கத்துடன் திரும்பிய தி ஏர்னெஸ்ட் அகாடமி பள்ளி மாணவி ஹேமவர்ஷினியை, பள்ளியின் இயக்குனர் டோரத்தி ராஜேந்திரன் மற்றும் பள்ளி முதல்வர் லலிதா பாராட்டினர்.