மேலும் செய்திகள்
26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
24-Sep-2025
திருப்பூர்: பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி, நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இது குறித்து திருப்பூர் கோட்ட செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மின் பகிர்மான வட்டம், திருப்பூர் கோட்ட அளவிலான, பிரதமர் சூரியவீடு இலவச மின்சார திட்டம் தொடர்பான கலந்தாய்வு, 26ம் தேதி நடக்கிறது. நுகர்வோர் மற்றும் பதிவு பெற்ற சோலார் நிறுவனத்தினர் மற்றும் வங்கி அலுவலர்கள் பங்கேற்கும், கலந்துரையாடல் கூட்டம், எஸ்.ஏ.பி., தியேட்டர் சிக்னல் அருகே உள்ளன, லுாகார்ஸ் சர்ச் மண்டபத்தில், நாளை (26ம் தேதி) காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்று, இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்த தெரிந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
24-Sep-2025