உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெள்ளத்தில் சிக்கிய 300 பேரை காப்பாற்றிய ராணுவத்தினர்

வெள்ளத்தில் சிக்கிய 300 பேரை காப்பாற்றிய ராணுவத்தினர்

ராணுவத்தில் பொறியாளராகப் பணிபுரிந்தேன். தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை மற்றும் எல்லையில் பணிபுரியும்போது கண்ணிவெடிகளைக் கண்டறிவது மிகப்பெரும் பணி.ஒருமுறை எதிரிகள் வைத்த கண்ணிவெடிகளை எடுத்துக்கொண்டே வந்தோம். என்னுடன் வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் ஆந்திரா வைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோர், ஏற்கனவே வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கினர்.கண்ணிவெடி வெடித்ததில் அவர்கள் கால்களை இழந்தனர். ஆனந்தன், விளையாட்டு வீரரும் கூட. கண்ணெதிரே நடந்த இச்சம்பவம் என்னை உறையச் செய்தது.கண்ணிவெடியை மீட்கச் செல்லும்போது பல்வேறு விபத்துகள் சகஜமாக நடைபெறும். இதேபோல், எதிரிகளைச் சிக்கவைக்க கண்ணிவெடிகளை வைக்கவும், எப்படி அவற்றைத் தந்திரமாக வைக்க வேண்டும் போன்ற யோசனைகளை நாங்கள் தர வேண்டும்.இதெல்லாம் பெரிய அனுபவம்.சமீபத்தில் அசாம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றபோது இரவு நேரம். ஒரு மரத்தின் கிளையில்தான் இரவு முழுக்க துாங்க வேண்டியிருந்தது. விடிந்ததும் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பதற்காக மூன்றே மணி நேரத்தில் பாலத்தை அமைத்தோம். ஒரு உயிருக்குக் கூட சேதமின்றி, 300 பேர் வரை வெள்ளத்தில் இருந்து மீட்டோம்.ராணுவத்தினர் பணி, தேசத்திற்கு இன்றியமையாதது. ராணுவத்தின் அங்கமாக பணிபுரிந்தது என்னைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை