உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று ஒற்றுமை பேரணி

இன்று ஒற்றுமை பேரணி

திருப்பூர்: மாவட்ட இளைஞர் நல அலுவலர் ஜோயல் பிரபாகர் கூறியதாவது: சர்தார் வல்லபபாய் படேலின் 150வது பிறந்தநாள், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய, இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை, 'மை பாரத் கேந்திரா' கோவை மற்றும் திருப்பூர் மாவட்டம் இணைந்து சர்தார் வல்லபபாய் படேல் 150வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. நவ., 25 வரை ஒற்றுமை பேரணி, பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. அந்த வகையில், திருப்பூரில் தீரன் சின்னமலை மகளிர் கலைக்கல்லுாரி மாணவியர், மங்கலம் பகுதியில் இன்று ஒற்றுமை பேரணி மேற்கொள்ள உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !