உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை பிரச்னைக்கு தீர்வு; திருப்பூரில் சி.என்.ஜி., உற்பத்தி மையம்

குப்பை பிரச்னைக்கு தீர்வு; திருப்பூரில் சி.என்.ஜி., உற்பத்தி மையம்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்காக, 58 கோடி ரூபாய் செலவில், சி.என்.ஜி., உற்பத்தி மையம் அமைக்கப்படவுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் தினமும் 800 மெட்ரிக் டன் அளவு குப்பை சேகரமாகிறது. பெருமளவு குப்பை கழிவுகள் பாறைக்குழிகளில் கொட்டப்படுகின்றன. பாறைக்குழிகளில் குப்பை கொட்ட பல பகுதியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், தற்போது நகரில் ஆங்காங்கே குப்பைகள் சேகரமாகும் வார்டு பகுதிகளில் உள்ள இடங்களில் அவற்றைக் கொட்டி வருவதால், எங்கும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் முன்வைத்த சி.என்.ஜி., உற்பத்தி மையம் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. உடுமலையில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் திருப்பூர் மாநகராட்சியில், 58 கோடி ரூபாய் மதிப்பில் உயிரி எரிவாயு (சி.என்.ஜி.,) உற்பத்தி மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட து. தினமும், 200 டன் அளவிலான குப்பை கையாளப்பட்டு, சி.என்.ஜி., உற்பத்தி செய்யப்படும். இம்மையத்தை இயக்கும் தனியார் நிறுவனம் அதனை சிலிண்டரில் அடைத்து விற்பனை செய்யும். மையம் அமைக்க, 4 ஏக்கர் நிலமும், குப்பை தரம் பிரிக்கும் மையம், 4 ஏக்கர் நிலமும் தேவைப்படும். இதற்கான இடம் இரு பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இடத்தை வகை மாற்றம் செய்து, மாநகராட்சிக்கு பெறப்பட்ட பின் உடனடியாக பணி துவங்கும் என்று மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !