உள்ளூர் செய்திகள்

சில வரி செய்திகள்...

விவசாய சங்க கூட்டம்அவிநாசி அருகே தெக்கலுாரில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் கட்டட திறப்பு விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சின்னசாமி வரவேற்றார். மாநில தலைவர் சண்முகம் சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தெக்கலுார் விசைத்தறி சங்க தலைவர் பொன்னுசாமி நன்றி கூறினார். கள் மீதான தடையை நீக்க வலியுறுத்துவது, ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வியாபாரிகள் வலியுறுத்தல்அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் முத்துக்குமரன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கணேஷ் கலந்து கொண்டார். செயலாளர் அபுசாலி, துணைத்தலைவர் அண்ணாதுரை, துணைச் செயலாளர்கள் தேவதாஸ், முத்துக்குட்டி உட்பட பலர் பங்கேற்றனர். சாலையோர கடைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதமானால், கடையடைப்பு, முற்றுகை போராட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, தாசில்தார் சந்திரசேகர், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், டி.எஸ்.பி., சிவகுமார் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் மற்றும் காங்கயம் உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூரில் சங்கத்தின் கோட்ட தலைவர் ராமன் தலைமை வகித்தார். காங்கயத்தில், உட்கோட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். கிளை சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்றோர், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ