மேலும் செய்திகள்
வாராந்திர சிறப்பு பஸ் திடீர்னு குறைச்சிட்டாங்க!
04-Jan-2025
திருப்பூர்; ' இன்றும், நாளையும், மூன்று பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வார விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அவ்வகையில், கோவில்வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, தலா, 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பத்து பஸ்கள் இயங்கவுள்ளது இன்று இரவு, நாளை நாள் முழுதும் இயங்கவுள்ளது.பொங்கல், குடியரசு தினம் என அடுத்தடுத்த விடுமுறை தினங்களால், வாராந்திர சிறப்பு பஸ்களில் கூட்டம் அலைமோதியது. நடப்பு வாரம் பொது விடுமுறை இல்லை என்றாலும், தை முகூர்த்தம் என்பதால், கூட்டம் ஓரளவு இருக்குமென, போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
04-Jan-2025