மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கல் நண்பர்கள் குழு ஏற்பாடு
14-Oct-2025
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், 70 வயது பூர்த்தி அடைந்த, இணையருக்கு, கோவில் சார்பில், சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக அரசின் ஹிந்து அறநிலையத்துறை சார்பில், மூத்த தம்பதியருக்கு, கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும் என, சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, உடுமலை மாரியம்மன் கோவிலில், 70 வயது பூர்த்தியடைந்த 5 இணையருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், தம்பதியருக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்யப்பட்டது. அப்போது, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தி, பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் தீபா, பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
14-Oct-2025